Connect with us

Cinema News

மல்லுவுட்டிலும் அசிங்கப்பட்ட தளபதி… ஆனா இது வேற கதை..

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என இன்றைக்கு இந்தியா முழுவதும் அதிகம் தேடப்படும் நடிகர்களுள் முக்கியமானவர் பஹத் பாசில். ஆனால், அவரின் சினிமா பயணத்தின் ஆரம்பம் அவ்வளவு இனிப்பாக இல்லை என்பதுதான் உண்மை.

தமிழில் விஜய்க்கு ‘காதலுக்கு மரியாதை’, மலையாளத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ‘அனியாதிபிராவு’ போன்ற பிளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பாசில். இவரின் மகன்தான் பஹத் பாசில். தன்னோட மகன் ஃபகத் ஃபாஸிலை ‘கையெத்தும் தூரத்து’ படத்தில் அறிமுகப்படுத்துனார். ஆனால், படம் அட்டர் ஃப்ளாப். ஷானு என்கிற பெயரில் அறிமுகமான பஹத்தின் நடிப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு காமெடியா?!.. எஸ்.கே. படத்தை கலாய்த்த உதயநிதி!. ஆனா நடந்ததே வேற!…

திரையில் எப்படி நடக்க வேண்டும்ல்; நடிக்க வேண்டும் என்கிற எந்தவொரு தெளிவும் இல்லாமல் ஒரு இயக்குநரின் மகன் என்பதால் மட்டுமே ஷானுவுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று மலையாள பத்திரிகைகள் கிழித்துத் தொங்கவிட்டன. இயக்குநர் பாசில் மீதும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அந்த நேரத்தில் அப்பாவுக்காகப் பேசிய “எந்தவிதமான பிரிபரேஷனும் இல்லாமல் நடிக்க வந்தது என்னோட தப்பு. என்னோட அப்பாவுக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை” என்று சொல்லிவிட்டு அமெரிக்காவுக்குப் படிக்கக் கிளம்பிவிட்டார். மயாமி பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, இயக்குநர் ரஞ்சித் அவரை நடிப்புக்கு மீண்டும் கொண்டுவர நினைத்தார்.

அவரின் நம்பிக்கையின் பேரில் மீண்டும் நடிக்க வந்தார். நடிப்பே வேண்டாம் என்று முழுக்குப் போட்டுவிட்டு சென்ற ஏழு ஆண்டுகளுக்குப் பின் `கேரளா கஃபே’ படம் மூலம் இண்டாவது இன்னிங்ஸை பஹத் தொடங்கினார். 10 குறும்படங்களைக் கொண்டதாக வெளியான கேரளா கஃபே ஆந்தாலஜியின் இயக்குநர் உதய் ஆனந்தன், பஹத்தை தன்னுடைய மிருதுஞ்ஜெயம் படத்தில் நடிக்க வைத்த்திருந்தார்.

இதையும் படிங்க: தங்கலானுக்கு விருது கொடுக்கலனா பிரச்சனை பண்ணுவோம்!… பொங்கும் ரசிகர்கள்!…

அந்த கேரக்டர் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்து வந்த சப்பா குரிசு, 22 ஃபீமேல் கோட்டயம் போன்ற படங்கள் பஹத்தை ஒரு நடிகராக அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றன. இப்போதும் தனது முதல் பட விமர்சனங்களை மறக்காத பஹத், ஒவ்வொரு படத்துக்கு முன்பும் அதை நினைவுபடுத்திக் கொண்டு தனது நடிப்பை மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார்.

இந்த கதையை  கேட்ட மாதிரி இருக்கேனு தோணுமே? கோலிவுட்டிலும் எஸ்.ஏ.சந்திரசேகர் மகன் விஜய் நடிக்க வந்த போது எக்கசக்க நெகட்டிவ் விமர்சனங்கள் தான். ஆனாலும் அவர் ஒளியாமல் நின்று ஜெயித்து காட்டியது தான் பெரிய விஷயம்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top