×

அனுஷ்கா நிலைமைதான் இவருக்குமா?.. தலைவிக்காக 20 கிலோ எடை கூடிய கங்கன ரணாவத்.. 

இயக்குநர் ஏ.எல்.விஜய் நடிகை கங்கனா ரனாவத்தை வைத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்ககை வரலாற்றை தலைவி என்கிற பெயரில் எடுத்துவருகிறார்.
 

இதற்கு பல எதிர்ப்புகளும் ஆதரவுகளும் வந்தாலும் இதுவரை வெளிவந்த போஸ்டரில் ஜெயலலிதாவின் முகம் கங்கனாவிற்கு சரியாக பொருந்தவில்லை என்பது போன்ற எதிர்மறையான கமெண்ட்சுகளே அதிகம் வந்தன. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக வெளிவந்த ‘தலைவி’ போஸ்டரில் கங்கணா ரணாவத் அச்சு அசலாக ஜெயலலிதா போன்றே இருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் 20 கிலோ எடை கூடியது தெரிய வந்துள்ளது. இதில் என்ன சோகம் என்னவெனில், இப்படத்திற்கு பின் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். எனவே, கூட்டிய எடையை மீண்டும் குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஏற்கனவே, நடிகை அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக இப்படித்தான் எடையை கூட்டி, பின் அதை குறைக்க முடியாமல் தற்போது வரை சிரமப்பட்டு வருகிறார். இந்த நிலை கங்கனாவுக்கும் வரக்கூடாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News