ஆர்யாவின் அனந்தன் காடு ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆர்யா நடித்து அடுத்து வெளிவர உள்ள படம் அனந்தன் காடு. ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் ஆர்யாவுடன் நிகிலா விமல், ரெஜினா கஸாண்ட்ரா மற்றும் கருப்பு புகழ் இந்திரன் உள்ளிட்ட பல்ர் நடித்துள்ளனர். இசையை காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளர். லூசிஃபர் (2019) மற்றும் 'எல்2: எம்புரான்' (2025) ஆகிய வெற்றிப்படங்களின் படங்களின் எழுத்தாளரான முரளி கோபி எழுதிய அரசியல் திரில்லர் வகையை சேர்ந்தது இந்த படம். இதனால் இப்படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் அனந்தன் காடு படம் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகிர 25ம் தேதி இப்படம் வெளியாகிறது. இது குறித்த அறிவிப்பௌ படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
முன்னதாக ஆர்யா நடிப்பில் மிஸ்டர் எக்ஸ் என்ற படம் வெளியானது. மிகவும் எத்ரிபார்ப்பில் வெளியான இப்படம் தோல்வியையே தழுவியது. இந்த நிலையில் அனந்தன் காடு படம் தன்னை காப்பாற்றும் என்று ஆர்யா நம்பிக்கை கொண்டுள்ளார்.
