25 நாட்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் அன்பே டயானா
தமிழ் சினிமாவில் அவ்வப்போது வெளியாகும் அழகான காதல் கதைகள் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். கடந்த ஆண்டு வெளியான வித் லவ், யூத், இதயம் முரளி போன்ற படங்கள் நல்ல வெற்றியை கொடுத்தன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அன்பே டயானா.
பாரி இளவழகன் நடித்து இயக்கியுள்ள இந்த படத்தில் ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பெரம்பூரைச் சேர்ந்த ஒரு இளைஞனுக்கும், ஆங்கிலோ-இந்தியப் பெண்ணுக்கும் இடையே நடக்கும் சுவாரசியமான காதல் கதையை குடும்ப உறவுகளை மையமாக வைத்து நகைச்சுவையாக உருவாகியுள்ள இப்படம், இளம் தலைமுறை ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் கடந்த ஜூலை 17ம் தேதி வெளியாகி 2வது வாரத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் வெளியானது. இதில் பல படங்கள் காணாமல் போனாலும் அன்பே டயானா தொடர்ந்து திரையரங்குகளில் ஓடியது.
திரையரங்குகளில் வெளியாகி தொடர்ந்து வரவேற்பை பெற்று வரும் அன்பே டயானா திரைப்படம் தற்போது 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. இதனை படக்குழுவினரும் ரசிகர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.