ஜூலை 17ல் வெளியாகும் அன்பே டயானா

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள  படம் அன்பே டயானா
 
anbe dayana

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள  படம் அன்பே டயானா.  குட் நைட் ,  டூரிஸ்ட் ஃபேமிலி  போன்ற  வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் வழங்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  ஜமா  படத்தின் மூலம்  கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக,  நீக்  திரைப்படத்தின் மூலம் இளைஞர்களின் மனதைக் கவர்ந்த ரம்யா ரங்கநாதன் நாயகியாக நடித்துள்ளார்.  நடிகை ரோஜா இப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ரி கொடுத்துள்ளார். மாவீரன், மண்டேலா படத்திற்கு இசையமைத்த பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Anbe dayana

இந்த நிலையில் அன்பே டயானா படாம் வருகிற  ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டு உறுதி படுத்தியுள்ளனர். 

Tags

From Around the web