ஜனநாயகன் வந்த போதிலும் அசால்டாக ஆட்டம் போடும் அன்பே யடானா
ஜமா படத்தை அடுத்து பாரி இளவழகன் நடித்து இயக்கி வெளிவந்திருக்கும் படம் அன்பே டயானா
Jul 26, 2026, 12:54 IST
ஜமா படத்தை அடுத்து பாரி இளவழகன் நடித்து இயக்கி வெளிவந்திருக்கும் படம் அன்பே டயானா. இதில் நாயகியாக ரம்யா ரங்க நாதன், பரிதாபங்கள் கோபி, சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சென்னையில் உள்ள பெரம்பூர் பின்னணியில் நடக்கும் ஒரு தெலுங்கு பையனுக்கும், ஆங்கிலோ இந்திட பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதல் கதையே இப்படத்தின் மையக்கரு. இதனை சுவாரஸ்யமகவும், நகைச்சுவையாகவும் கூறியதால் ரசிகர்கள் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.
கடந்த வியாழன் அன்று விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் படம் வெளியானதால் பல படங்கள் திரையரங்குகளிலிருந்து தூக்கப்பட்டன. ஆனாலும் அன்பே டயானா பல ஊர்களில் இன்னும் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. 2 வாரங்கள் ஆன நிலையில் இப்படம் இதுவரை ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
