அன்பே டயானா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..எந்த தளத்தில் தெரியுமா?
ஜமா படம் மூலம் பேசப்பட்டவர் பாரி இளவழகன். இவரது இரண்டாவது படம் அன்பே டயானா. பாரி இயக்கி நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக ரம்யா ரங்க நாதன் நடித்துள்ளார். மேலும் ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குட் நைட் , டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய வெற்றி படங்களை கொடுத்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தனர்.
பெரம்பூரைச் சேர்ந்த ஒரு குடும்ப்பத்தை சேர்ந்த பையனுக்கும் ஆங்கிலோ இந்திய பெண்ணுக்கும் ஏற்படும் காதலை நகைச்சுவையாக சொலியிருப்பதால் பலருக்கும் இப்படம் பிடித்தது. கடந்த ஜூலை 17ம் தேதி வெளியான இப்படம் 25 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அன்பே டயானா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, அன்பே டயானா வருகிற 28ம் தேதி பிரபல ஓடிடி தளமான சோனி லைவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.