3 நிமிஷ ஐட்டம் சாங்குக்கு டிவி ஆங்கர் கேட்ட தொகை... அதிர்ந்த படக்குழு

தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான டி.வி ஆங்கர் அனசுயா பரத்வாஜ். டிவி மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கிளாமரால் பாப்புலரானவர் அனசுயா. இவர், சாய்தரம் தேஜாவின் வின்னர் படத்தில் ஐட்டம் சாங் மூலம் டோலிவுட் ரசிகர்களின் தூக்கம் கெடுத்தவர்.
கார்த்திகேயா மற்றும் லாவண்யா ஆகியோர் நடிக்கும் சவ்வு கபுரு படக்குழு ஐட்டம் சாங் ஒன்றுக்காக சமீபத்தில் இவரை அணுகியிருக்கிறது. இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்த அனசுயா, அதற்காகக் கேட்ட தொகை படக்குழுவை அதிரவைத்திருக்கிறது. கௌஷிக் பேகல்பாட்டி இயக்கும் அந்தப் படத்தை பன்னி வியாஸ் தயாரிக்கிறார். படத்தில் இடம்பெறும் 3 நிமிடப் பாடலுக்குத் தனக்கு 20 லட்ச ரூபாய் வேண்டும் என கறார் காட்டியிருக்கிறார் அனசுயா. அதற்குத் தயாரிப்பாளர் தரப்பும் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், ஷூட்டிங்கிற்குத் தயாராகி வருகிறாராம் அனசுயா. இது டோலிவுட்டில் மிகப்பெரிய டாக்காக மாறியிருக்கிறது.