×

600 விக்கெட்களை ஆண்டர்சன் செய்த சாதனை… இன்னும் 100 விக்கெட் வீழ்த்த நம்பிக்கை!

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது 600 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

 

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தனது 600 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு கைகொடுப்பது போல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கைகொடுப்பது இல்லை. அதிலும் ஒரு சிலர்தான் விதிவிலக்கு. அந்த வகையில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்ப்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிகமான விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை தன் வசம் வைத்துள்ளார். நேற்றைய பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஜர் அலிகானை தனது 600 ஆவது விக்கெட்டாக வீழ்த்தி சாதனை படைத்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆண்டர்சன் ‘ நான் ஆஷஸ் தொடரில் இருக்க வேண்டும் என பயிற்சியாளர் விரும்புகிறார். இப்போது என்னுடைய பந்துவீச்சைப் பார்க்கையில் என் திறமை வற்றிவிட வில்லை எனத் தெரிகிறது. என்னால் 700 விக்கெட்கள் வீழ்த்த முடியும்… ஏன் முடியாது?’ என உறுதி அளித்துள்ளார். தற்போது ஆண்டர்சனுக்கு 38 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முரளிதரன், ஷேன் வார்ன், கும்ப்ளே ஆகியோர் ஆண்டர்சனுக்கு முன் உள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News