மனசுல பெரிய MGRனு நெனப்பா? பிரஜனை விளாசிய தயாரிப்பாளர்!

 
actor prajan

பிக் பாஸ் பிரஜன்:

பிக் பாஸ் புகழ் ஹீரோவாக நடிக்கும் அந்தரன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்தரன் திரைப்படம் ஒரு இளம் பெண்ணை சுற்றி நடக்கும் மர்மங்களை ஒரு ஐபிஎஸ் அதிகாரி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதை தான் இந்த படத்தின் கதை.

andharan

இந்த திரைப்படத்தில் பிரஜன் ஹீரோவாக ஐபிஎஸ் அதிகாரி ரோலில் நடிக்கிறார். இவானா வருண் இளம் கதாநாயகியாக இந்த திரைப்படத்தில் நடிக்கிறார். சந்தோஷ் ராவணன் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் .

ப்ரோமோஷன்

இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் பிரஜன் கலந்து கொள்வதற்கு தாமதமாக இருக்கிறது. அப்போது படத்தின் தயாரிப்பாளர் படத்தோட ஹீரோ எங்க? ஹீரோவை ஆள காணோம்... எதுக்கு இவங்க எல்லாம் நடிக்க வராங்கன்னு தெரியல என்று கடும் கோபத்துடன் திட்டினார் .

andharan

இவரு என்ன எம்ஜி ஆரா? 

மேலும், இவர் என்ன எம்.ஜி.ஆரா அவரை தான் வராரு... வந்துகிட்டே இருக்காருன்னு சொல்லுவாங்க. இவங்கெல்லாம் என்ன எம்.ஜி.ஆரா இவங்களுக்காக எல்லாம் ஏன் காத்துட்டு இருக்கனும் என கடுமையாக விளாசினார்.  

முதல் திரைப்படமாக ஹீரோவாக நடிக்கும் பிரஜன் இந்த முதல் திரைப்படத்திற்கு இப்படி பொறுப்பில்லாமல் இருப்பது சினிமா துறையில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக அவரது மனைவி சாண்ரா இதற்காக தான் நாங்கள் 18 வருஷமாக காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web