கழட்டிவிட்ட அனிருத்!.. சிம்புவுடன் செம கச்சேரி பண்ணும் ஆண்ட்ரியா!..

 
andrea

அக்டோபர் 24ஆம் தேதி ஜெர்மனியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஆண்ட்ரியாவும் சிம்புவும் கலந்துகொண்டனர், அப்போது இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆண்ட்ரியா மற்றும் அனிருத் காதலித்து வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அனிருத் திருமணம் குறித்த அறிவிப்புக்குப் பிறகு ஆண்ட்ரியா சிம்புவுடன் இணைந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.ஆனால், இசை நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக்கொண்டதை மட்டும் வைத்து அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முடிவுக்கு வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துக்கொண்டிருக்கும் அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை. மேலும், அரசன் வெளியிட்டு தேதியும் தள்ளிப்போன நிலையில் சிம்பு ஜெர்மனியில் பாட்டு பாடி ஆடிக்கொண்டிருப்பதால் படத்தின் வெளியீடு எப்போது என்றே தெரியவில்லை என்கின்றனர்.

நடிகை ஆண்ட்ரியா சிம்புவின் அரசன் படத்திலும் அவருடன் இணைந்து நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா கச்சேரியிலேயே சிம்பு சமீப காலமாக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆனால், சிம்பு சீக்கிரமே படங்களை ரிலீஸ் பண்ண வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

Tags

From Around the web