×

இன்ஸ்டாவில் கொடூர கமெண்டுகள்... கேப்ஷனை டெலீட் செய்த ஆண்ட்ரியா

இன்ஸ்டாவில் இட்ட பதிவுக்குக் கிடைத்த நெகட்டிவ் கமெண்டுகளால், கேப்ஷனையே நீக்கியிருக்கிறார் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா. 
 

நடிகை ஆண்ட்ரியா தமிழ், தெலுங்கில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த விஜய்யின் மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதனால், அம்மணி மிகவும் ஹேப்பியாக இருக்கிறார். 


பாடல் பதிவுகள், நடிப்பு தவிர இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாக்களிலும் ஆண்ட்ரியா மிகவும் ஆக்டிவ்வாக இருக்கிறார். இவர் தனது அன்றாட வொர்க் அவுட் மட்டுமல்லாது ஹாப்பிகள் குறித்தும் சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வருகிறார். 


இந்தநிலையில், இவர் சமீபத்தில் இன்ஸ்டாவில் இட்ட பதிவு நிறைய நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்று வருகிறது. `மூட்’ என்ற தலைப்புடன் அவர் கத்தரிக்காய் எமோஜியை அவர் பதிவு செய்திருந்தார். ஆனால், இந்தப் போட்டோவுக்கு ஆபாசமாக ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்யத் தொடங்கினர். இதனால், பின்வாங்கிய ஆண்ட்ரியா அந்தப் பதிவின் கேப்ஷனில் இருந்த கத்தரிக்காய் எமோஜியை நீக்கிவிட்டு பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைதளங்களில் வைரலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News