குளுகுளு லொகேஷனில் சூப்பர் கூல் போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!
ஜில்லுன்னு போஸ் கொடுத்த நடிகை ஆண்ட்ரியா!
Fri, 19 Mar 2021

நடிகை ஆண்ட்ரியா பாடகியாக இருந்தாலும் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திறமையும் அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா தொடர்ந்து முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார்.
இதற்கிடையில் அவ்வப்போது ஆல்பம் சாங் , மேடை கச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாடல் பாடி அசத்தி வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளவாசிகளை கைக்குள் போட்டிருக்கும் ஆண்ட்ரியா தற்போது பனிமலையில் அமர்ந்து குளுகுளுன்னு போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.