×

காதலரிடம் முத்தம் வாங்கிய ஆண்ட்ரியா... ஆவ்வ்வ்.. வாயை பிளந்த இளசுகள்

ஆண்ட்ரியா தனது காதல் குறித்த முக்கிய தகவலை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.
 
 

நடிகையாக இல்லாமல் பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு, அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார். படத்தில் பெரிய நடிப்புக்கான இடம் அவருக்கு கொடுக்கப்படவில்லை என்றாலும் அம்மணியின் தொடர் பட வரவு அவருக்கு கோலிவுட்டில் ஒரு இடத்தை பெற்று தந்து இருக்கிறது. 

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியாவின் கிளைமாக்ஸ் பெர்ஃபாமென்ஸுக்கே அப்ளாஸ் அள்ளியது. தொடர்ந்து, அரண்மனை 3, பிசாசு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதை ஆண்ட்ரியா வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.

இந்நிலையில், ஆண்ட்ரியா தனது செல்ல நாய் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருந்தார். அதில் என் என்றென்றும் காதல் எனக் கேப்ஷனுடன் பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் முத்த எமோஜிகளை பறக்கவிட்டு வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News