Categories: Cinema News latest news

நிர்வாணமா நடிக்க சொல்லி கட்டாயப்படுத்துனாங்க…. பகீர் கிளப்பிய பிரபல நடிகை….!

வட இந்திய சினிமாக்களை போல தென்னிந்திய சினிமாக்கள் கிடையாது. அதிலும் குறிப்பாக தமிழ் படங்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. கதைக்கு அத்தியாவசமாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒரு சில அடல்ட் காட்சிகளுக்கு சென்சார் போர்டு அனுமதி அளிக்கிறது.

இப்படி உள்ள நிலையில் படத்தில் தன்னை நிர்வாணமாக நடிக்க சொல்லி படக்குழுவினர் கட்டாயப்படுத்தியதாக பிரபல நடிகை ஒருவர் அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். அந்த நடிகை வேறு யாருமல்ல திரையுலகில் பாடகியாக நுழைந்து தற்போது நடிகையாக அவதாரம் எடுத்துள்ள நடிகை ஆண்ட்ரியா தான்.

பச்சைக்கிளி முத்துச்சரம் படம் தொடங்கி வடசென்னை வரை படத்திற்கு படம் வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஆண்ட்ரியா கூறியதாவது, “கொரோனா ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டு பட வாய்ப்புகள் இன்றி கஷ்டப்பட்டேன். அந்த சமயத்தில் தான் பிசாசு 2 படவாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டேன்.

ஏனென்றால், இந்த படத்தில் 15 நிமிட காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க வேண்டுமென இயக்குனர் கூறினார். எனவே நான் முடியாது என்று கூறி மறுத்து விட்டேன். ஆனால், என்னை கட்டாயப்படுத்தினார்கள். பின்னர் கதை தரமானதாக இருந்ததால் அக்காட்சியில் நடிக்க சம்மதித்தேன்” என கூறியுள்ளார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்