திரைப்பட உலகில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா.
கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமாருடன் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதன் பிறகு, செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, இவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா திரைப்படத்திலும் நடித்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர் இரத்த தானம் கொடுக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதோடு கமெண்ட் ஒன்றையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
அதில் நிஜ ஹீரோவாக வேண்டும் என்றால் தயவு செய்து இரத்த தானம் செய்து ஒருவரின் உயிரை காப்பாற்றுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…