Categories: Cinema News latest news throwback stories

நடிக்க வந்தா அந்த வேலையை மட்டும் பாருங்கடா.! அஜால் குஜால் வேலை செஞ்சா இப்படிதான்…

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்து விட்டு அந்த படம் சூப்பர் ஹிட் ஆனவுடன் தனக்காக தான் அந்த படம் ஓடியது என்று சிலர் நினைத்து, அடுத்தடுத்து கதை தேர்வில் கவனம் காட்டாமல், காணாமல் போன நடிகர்கள் கோலிவுட்டில் ஏராளமாக இருக்கின்றனர்.

அவர்களின் சினிமா கேரியர் மொத்தமாக க்ளோஸ் ஆகி உள்ளது. அதில் ஒரு நடிகர் தான் அங்காடி தெரு படத்தின் மூலம் அறிமுகமான மகேஷ். தனது முதல் படத்திலேயே நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுவிட்டார் மகேஷ். உண்மையில் அதில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிக்கொண்டு வந்திருப்பார்.

அவரது முதல் பட இயக்குனர் வசந்தபாலன். அதனால் அவரால் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடிந்தது. ஆனால் அடுத்தடுத்த படங்களில் கதை தேர்வில் நாட்டமில்லாமல்,  உடன் நடிக்கும் நடிகைகளுடன் தொடர்பு, அவர்கள் உடன் வந்தவர்களுடன் தொடர்பு, தொடர் கிசு கிசு என்று அதில் அதிக நாட்டமாக இருந்து விட்டாராம் மகேஷ்.

இதையும் படியுங்களேன் – தொடர்ந்து ‘அந்த’ நடிகைக்கு சிபாரிசு செய்துள்ள அஜித்.! காரணம் இதுதான்.?!

கதை தேர்வில் நாட்டமில்லாமல், சூட்டிங் வருவதற்கே மிகவும் எரிச்சலாக உணர்ந்ததாகவும் சிலர் மகேஷ் பற்றி கூறுகின்றனர். அதன் காரணமாகத்தான் அவர் நடித்த படங்கள் தற்போது வரை வியாபாரம் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கி இருக்கிறதாம். இதனை பிரபல சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் குறிப்பிட்டு இருப்பார்.

Manikandan
Published by
Manikandan