×

தாலி பற்றி பேசி சர்ச்சையை கிளப்பிய அனிதா சம்பத்

தாலியை கழற்றினாலும் அதில் எந்த தவறும் கிடையாது என்று சர்ச்சையாக பதிலளித்துள்ளார்.
 
08359e2b-bcd4-4ca5-ba13-3d053472638e

பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி பிரபலமானவர் அனிதா சம்பத். 

ஒருசில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடிகையாக அறிமுகமாகி நடித்து கொடுத்துள்ளார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் வெறுப்பை சந்தித்து வந்தார்.

கையை நீட்டி பேசியது, நாக்கை சுழற்றி பேசுவது என வம்பு இழுத்து மாட்டிக்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தந்தையின் மறைவு என சில காலங்கள் செல்ல இணையம் பக்கம் மீண்டும் வந்தார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் அனிதா சம்பத்தின் புகைப்படத்தை பார்த்து, நெற்றியில் குங்குமம் வைத்தால் மேலும் ஒரு மடங்கு அழகாக இருக்கும் என்று கூறியுள்ளார். அதற்கு அனிதா சம்பத், என் செய்தியை பார்ப்பவர்கள் எல்லா மதத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.

அவர்களுக்கு என் மதத்தை அடையாளப்படுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை, அவற்றை நான் பின்பற்றுவதில்லை. யாவரும் கேளிர் என பதிவிட்டிருந்தார். மேலும் தாலியை கழற்றுவதில்லை. மறைத்துக்கொள்வேன்.

மதத்தை அடையாளப்படுத்த விரும்பாமல்தான் இப்படி நடந்து கொள்கிறேன் என்று கூறியுளார். மேலும் தாலியை கழற்றினாலும் அதில் எந்த தவறும் கிடையாது என்று சர்ச்சையாக பதிலளித்துள்ளார். தாலியின் மகத்துவம் பார்க்க எந்த மதத்தையும் பார்க்க வேண்டாம் என்றுப் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News