அங்கீகாரம் படத்தின் அசத்தலான அப்டேட்!... கேஜேஆர் கலக்குறாரே

 
kjr

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் மறைந்திருக்கும் போராட்டங்களையும், அவர்களுக்கான அங்கீகாரத்திற்கான தேடலையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘வீரா வீரா’ தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இயக்குநர் பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதுடன், தடகள விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் விளையாட்டுத்துறையில் நிலவும் அவலங்களை யதார்த்தமாக பதிவு செய்கிறது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படம், விளையாட்டுத்துறையில் மறைக்கப்படும் உண்மைகளை பேசும் முக்கியமான படைப்பாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. திரைப்படத்தின் கதாநாயகனாக பிரபல தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர் அறிமுகமாகிறார். அவருடன் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல் வரிகளை எழுதியுள்ளார். ஏற்கனவே வெளியான ‘சட்டம் சட்ட சட்ட சான்றோரே’ என்ற முதல் பாடலும், படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘வீரா வீரா’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

 தற்போது வெளியாகியுள்ள ‘வீரா வீரா’ பாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Tags

From Around the web