சமந்தா, சென்னையில் பிறந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். “வின்னைத்தாண்டி வருவாயா” திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
சமந்தாவின் கொஞ்சும் அழகும், சிக் என்ற தேகமும் இவருக்கு பல முன்னணி இயக்குனர் மற்றும் கதாநாயகர்கள் படங்களில் வாய்ப்பை பெற்று தந்தது. சமந்தாவின் நடிப்பு திறமையை பாராட்டி பல பிளிம் ஃபேர் மற்றும் மாநில அரசின் விருதுகள் தேடி வந்தன.
புகழின் உச்சியில் இருந்த நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனை காதலித்து திருமணம் செய்து, குறுகிய காலத்தில் விவாகரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமந்தா விவாகரத்து செய்த பின்னர் “காத்து வாக்கில் ரெண்டு காதல், யாஷோத” உள்ளிட்ட பல முன்னணி திரைப்படங்களில் வாய்ப்பு தேடிவந்தது. “புஷ்பா” என்ற திரைபடத்தில் “ஊ சொல்றியா” என்று இவர் இளமை துள்ள போட்ட ஆட்டம், பல இளசுகளை வெகுவாக கவர்ந்தது.
பொதுவாக தைரியமான கருத்துகளை கூற தயங்காத சமந்தா, சமீபத்தில் சர்ச்சைக்கு உரிய வாசகம் உள்ள டீ ஷர்ட் போட்டுகொண்டு வலம் வரும் புகைப்படம் அனைவரையும் புருவம் உயர்த்த செய்தது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…