×

அஜித் மகளை மிரட்டிய ரசிகர்... என்ன பதில் சொன்னார் தெரியுமா?

ரசிகர் ஒருவர் தன் காதலை சொல்லி அதை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இமெயில் அனுப்பியதாக அனிகா சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அந்த இமெயிலை பார்த்து அனிகா பயந்துவிட்டாராம்.

 
76934803

ரசிகர் ஒருவர் தன் காதலை சொல்லி அதை ஏற்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக இமெயில் அனுப்பியதாக அனிகா சுரேந்திரன் தெரிவித்துள்ளார். அந்த இமெயிலை பார்த்து அனிகா பயந்துவிட்டாராம்.

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்த என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் அனிகா சுரேந்திரன். அதன் பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படத்தில் மீண்டும் அவருக்கு மகளாக நடித்தார் அனிகா.

செட்டில் அஜித்தை அப்பா என்று தான் அழைப்பேன் என பேட்டி ஒன்றில் கூறினார். அனிகாவை அஜித் மகளாகவே அவரின் ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதனால் தல பொண்ணு என்று அவரை செல்லமாக அழைக்கிறார்கள்.


அவ்வப்போது விதவிதமாக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவர் சேலை அணிந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, ஹீரோயினாக நடிக்க அனிகா தயாராகிவிட்டார், இனியும் அவரை சின்னக் குழந்தையாக நடிக்க வைக்க முடியாது என்றார்கள்.

அனிகா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவானவர். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பார். இந்நிலையில் அவர் லைவ் சாட்டில் வந்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக பதில் அளித்தார்.

அப்பொழுது ரசிகர் ஒருவர் கேட்டதாவது, உங்களின் தீவிர ரசிகர் ஒருவர் தன் காதலை சொல்லி, அதை நீங்கள் ஏற்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறினால் என்ன செய்வீர்கள் என்றார்.

அதற்கு அனிகா கூறியதாவது, அது எனக்கு நடந்திருக்கிறது. இமெயில் மூலம் அப்படி ஒரு ப்ரொபோஸல் வந்தது. அதை பார்த்து எனக்கு பயமாக இருந்தது. ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே விட்டுவிட்டேன் என்றார்.

From around the web

Trending Videos

Tamilnadu News