இந்த பக்கம் கீர்த்தி சுரேஷ்!.. அந்த பக்கம் கிருத்தி ஷெட்டி!.. அனில் ரவிபுடியின் அடுத்த படம்!

 
venky

சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகி 350 கோடி வசூல் ஈட்டிய மன சங்கர வரபிரசாத் காரு படத்தை இயக்கிய அனில் ரவிபுடியின் புதிய மல்டி-ஸ்டாரர் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் தற்போது தற்காலிகமாக வெங்கிஅனில் 5  என்ற பெயரில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

மூத்த நடிகர் வெங்கடேஷ் டக்குபாட்டி மற்றும் நடிகர் நந்தமுரி கல்யாண் ராம் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தில், முன்னணி நடிகைகளான கீர்த்தி சுரேஷ் மற்றும் கிருத்தி ஷெட்டி கதாநாயகிகளாக இணைந்துள்ளனர். இதில் வெங்கடேஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும், கல்யாண் ராமுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டியும் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

குடும்ப பொழுதுபோக்கு படங்களை வெற்றிகரமாக இயக்கி வரும் அனில் ரவிபுடி, இந்த படத்தையும் பிரம்மாண்டமான என்டர்டெய்னராக உருவாக்க திட்டமிட்டுள்ளார். மேலும், இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீப காலங்களில் பல மொழி திரைப்படங்களில் வெற்றிகரமாக பணியாற்றி வரும் ஜி.வி. பிரகாஷின்  இசை படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான பூஜை விழாவுடன் திரைப்படத்தின் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். தற்போது அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகின்றன.

இந்நிலையில், படத்தின் வழக்கமான படப்பிடிப்பு ஜூன் 22, 2026 முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திட்டமிட்டபடி பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2027 ஆம் ஆண்டு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரைப்படத்தை பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

Tags

From Around the web