Connect with us

Cinema News

அனிருத் தப்பிச்சிட்டாரு!.. இந்தியன் 2 டிரெய்லருக்குப் பிறகு அவரோட நிலைமை தான் ரொம்ப மோசம்!..

இந்தியன் 2 படத்தின் பாடல்கள் வெளியானபோது அனிருத்தை போட்டு அந்த அடி அடித்து வைத்தனர் ரசிகர்கள். ஆனால் இதற்கு மேல் அனிருத் அழகாக தப்பித்துக் கொள்வார் என்றும் ரசிகர்களிடம் சிக்கி சின்னாபின்னமாக போவது இயக்குனர் ஷங்கர் தான் என ரசிகர்கள் பிளேட்டை திருப்பிவிட்டு உள்ளனர்.

28 ஆண்டுகளுக்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் திரைப்படம் தேசிய விருதை வென்றது. ஆஸ்கர் விருதை ஏன் இந்த படம் வாங்கவில்லை என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன. ஆனால் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தியன் 2 படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் என்ன கொடுமை ஷங்கர் இது என கிண்டல் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி இத சொன்னதும் ஷாக் ஆயிட்டேன்! என்கிட்ட போய் இப்படி? சிங்கம் புலி பகிர்ந்த ரகசியம்

இந்தியன் திரைப்படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் தரமான இசையை கொடுத்த நிலையில், இந்தியன் 2 படத்துக்கு அனிருத் நல்ல பாடல்களை போடவில்லை என அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியன் 2 படமே சியான் விக்ரமின் கோப்ரா படம் போலத்தான் ஷங்கர் எடுத்து வைத்துள்ளார் என்றும் இந்த படத்தை அனிருத் தனது இசையால் காப்பாற்றி உள்ளார் என்றும் ரசிகர்கள் கூற ஆரம்பித்து விட்டனர்.

கடந்த 6 ஆண்டுகளாக உருவாகி வந்த இந்தியன் 2 திரைப்படமே இப்படி இருக்கிறதே இதில் இந்தியன் 3 திரைப்படத்தை ஷங்கர் என்ன செஞ்சு வச்சிருக்கப் போறாரோ தெரியலையே என நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இளையராஜாவுக்கு காப்பி ரைட்ஸ் மட்டும் மாதம் இவ்வளவு கோடி வருதா?!.. அடேங்கப்பா!..

ஐ படத்துக்குப் பிறகு ஷங்கரின் டேஸ்ட் மற்றும் கிரியேட்டிவிட்டியெல்லாமே கெட்டுப் போய் விட்டது என்றும் பிரம்மாண்டம் மட்டுமே இருந்தால் போதுமா? படத்தை பார்க்க ஒரு ஹை மொமண்டாக இருக்க வேண்டாமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இந்தியன் 2 டிரெய்லர் விவேக் சொல்வது போல என்ன கருமம் டா இது என்றும் கருமம் இல்ல வர்மம் என படத்தின் வசனத்தை வைத்தே விமர்சனங்கள் தாறுமாறாக குவிந்து வருகின்றன. எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை இந்த படம் பெறுமா என்பதே சந்தேகம் தான் என்றும் கூறுகின்றனர். ஜூலை 12ம் தேதி படம் வெளியானால் தெரிந்து விடும்.

இதையும் படிங்க: 2வது பாட்டும் வியூஸ் தேறலயே!.. தங்கச்சி செண்டிமெண்ட் வொர்க் ஆகலயே!.. அப்செட்டில் வெங்கட்பிரபு!.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top