ஜன நாயகனுக்கு 13 கோடி வாங்கிய அனிருத் இப்போது கேட்கும் சம்பளம் இவ்ளோவா?

 
Anirudh

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் அனிருத் ரவிச்சந்தர் தான். தனுஷின் '3' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத் இசையில் கடைசியாக வெளியான படம் 'ஜன நாயகன்'.

ஹெச்.வினோத் இயக்கியிருந்த இந்த படத்தில் விஜய் தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் ரூ.13 கோடியாம்.

இப்போது ரஜினியின் 'ஜெயிலர் 2, தர்மன், KHxRK Reunion படம்', லோகேஷ் கனகராஜின் 'டிசி', சிம்புவின் 'அரசன்' மற்றும் தெலுங்கு மொழியில் நான்கு படங்கள், ஹிந்தியில் ஒரு படம் என அனிருத் பிஸியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. எவ்ளோ என்று விசாரிக்கையில், அனிருத் சமீபத்தில் ஒப்பந்தமான ஒரு புதிய படத்துக்கு ரூ.28 கோடி சம்பளம் கேட்டிருக்கிறாராம்.

From Around the web