50 கோடி அனிருத்துக்கும் - 500 கோடி காவ்யா மாறனுக்கும் டும் டும் டும்!..

 
aniruth

முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குடும்பத்தின் வாரிசான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் குறித்த செய்திகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நீண்ட நாட்களாக இருவரது திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று கிரீஸ் நாட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், சென்னையில் நவம்பர் 21ஆம் தேதி பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் உலகளவில் கவனம் பெற்ற அனிருத், தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழித் திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.50 கோடி எனக் கூறப்படுகிறது. லியோ படத்துக்குப் பிறகு 10 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை அனிருத் வாங்கி வருகிறார் என்கின்றனர். மற்ற இசையமைப்பாளர் இசையமைக்கும் படங்களில் பணம் வாங்காமல் பாடிக் கொடுத்தும் வருகிறார். 

மறுபுறம் காவ்யா மாறன், கலாநிதி மாறன் மற்றும் காவேரி மாறனின் மகள் ஆவார். சன் டிவி நெட்வொர்க்கின் நிர்வாகப் பொறுப்புகளிலும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கிரிக்கெட் அணியின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் செயல்பட்டு வருகிறார். இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.400 முதல் ரூ.500 கோடி வரை இருக்கலாம் எனவும்  அவரது தந்தை கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.23,000 கோடிக்கும் அதிகம் எனவும் கூறப்படுகிறது.

இதனால் அனிருத்தின் சொத்து மதிப்பைவிட காவ்யா மாறனின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகமாகும். இந்த திருமனத்தினால் அனிருத் பல கோடியை சொந்தமாக்கவுள்ளார் என்கின்றனர்.

Tags

From Around the web