300 கோடி செலவில் நடக்கும் அனிருத் திருமணம்? - கசிந்த தகவல்...

 
aniruth

கடந்த 10 வருடங்களில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து கோலிவுட்டில் முக்கிய இசையமைப்பாளராக மாறியவர் அனிருத். நடிகர் ரஜினியின் நெருங்கிய உறவினர் இவர்.
ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி என கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் பல படங்களுக்கு இவர் இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 திரைப்படத்தில் கூட அனிருத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பேசப்பட்டது. ஒருபக்கம், சன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனை அனிருத் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்களின் திருமணம் வருகிற 11ம் தேதி கிரீஸ் நகரத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் முக்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொள்கிறார்கள்..

அதன்பின் சென்னையில் வருகிற 21ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அனேகமாக மூன்று வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டு பயணம், தங்குமிடம், போக்குவரத்து, உணவு, ஆடைகள் அலங்காரம், வரவேற்பு என திருமண செலவு ரூ.300 கோடியை தாண்டும் என செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதோடு மருமகனாக வரவுள்ள அனிருத்துக்கு விலை மதிப்புள்ள பல பரிசுகளை மாமனார் கலாநிதி மாறன் கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

Tags

From Around the web