Categories: Cinema News latest news

அடுத்தடுத்து மெகா ஹிட்.. ஆனாலும் மார்க்கெட் இல்லை.?! அனிருத்தின் சோக நிலைமை…

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோ  திரைப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக நிற்கிறார் அனிருத். ஒரே நேரத்தில், விஜய் திரைப்படம், அஜித் திரைப்படம், ரஜினி, கமல், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என இவருக்கு போகத்தான் மற்ற இசையமைப்பாளர்களுக்கு என கூறும் அளவிற்கு பிஸியாக இருந்தவர் அனிருத்.

இவர் இசையில் கடைசியாக விக்ரம் திரைப்படம் எவ்வளவு பெரிய ஹிட் என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதன் பின்னணி இசை ரசிகர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டது. அப்படி இருக்க, அடுத்தடுத்து மெகா ஹிட் மெகா பட்ஜெட் படங்களுக்கு இசையமைப்பார் என எதிர்பார்த்தால் தற்போது கேரளா பக்கம் சென்று உள்ளார் அனிருத்.

நிவின் பாலி நடிக்க உள்ள ஒரு மலையாள திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். பொதுவாக இங்கு தமிழ், தெலுங்கில் மார்க்கெட் குறைந்த பிறகு தான் நடிகைகள் மற்ற கலைஞர்கள் கேரளா பக்கமோ அல்லது கன்னட சினிமா பக்கமோ ஒதுங்கிடுவார்கள். தற்போது இந்த நிலைமை அனிருத்துக்கு ஏற்பட்டு விட்டதே என்று ரசிகர்கள் சற்று வருத்தத்தில் உள்ளனர்.

இதையும் படியுங்களேன் – கொஞ்சம் யோசிங்க நெல்சன்.?! அந்த கனவு கன்னி தலைவருக்கு செட் ஆகாது… வலுக்கும் கோரிக்கைகள்.!

அனிருத் கைவசம் தற்போது அஜித்தின் 62 வது திரைப்படம் உள்ளது. அது இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இந்தியன் 2 திரைப்படம் அது என்ன நிலைமை என்று இன்னும் தெரியவில்லை. தளபதி 67 அதுவும் உறுதியாக தகவல் வெளியே வரவில்லை. தற்போதைக்கு பாலிவுட் திரைப்படமான ஷாருக்கான் திரைப்படத்திற்கும், ரஜினியின் ஜெயிலர் படதிற்கும் தான் இசையமைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

Manikandan
Published by
Manikandan