கல்யாணத்துக்கு தனுஷை அழைக்காத அனிருத்!.. அப்படி என்ன கோபம்?...

 
anirudh dhanush

லதா ரஜினிகாந்தின் சகோதரர் ரவிச்சந்தரின் மகன்தான் அனிருத். அனிருத்தின் உறவினர் ஐஸ்வர்யாவை தனுஷ் திருமணம் செய்து கொண்டதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அனிருத்துக்கு இசையின் மீது ஆர்வம் இருப்பதை தெரிந்து கொண்டார் தனுஷ். இருவரும் இணைந்து ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலைம் உருவாக்கி யுடியூப்பில் பதிவேற்ற அந்த பாடல் அதிரி புதிரி ஹிட் அடித்தது.

அந்த வீடியோ யூடியூப்பில் பல கோடி வியூஸ் போனது. அதன்பின் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் அனிருஷ் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் தனுஷ் நடித்த மற்றும் தயாரித்த திரைப்படங்களுக்கு அனிருத்தே இசையமைத்தார். ஆனால் நெருக்கமாக இருந்த நட்பில் ஒரு கட்டத்தில் பிளவு ஏற்பட்டது.

அதற்கு என்ன காரணம் என்பது யாருக்கும் தெரியவில்லை. தனுசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையே பிடிக்காமல் போக அனிருத்  சிவகார்த்திகேயனுக்கு நெருக்கமாகி அவரின் படங்களுக்கு இசையமைத்தார். அதேபோல், விக்கி, நயன்தாரா ஆகியோருடன் தனுஷுக்கு முட்டிக்கொண்டது. விக்னேஷ் சிவனின் படங்களுக்கும் அனிருத்தே இசையமைத்தார். இவையெல்லாம் ஒரு முக்கியமான காரணமாக இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.

anirudh

ஒருபக்கம், சமீபத்தில் அனிருத்தின் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அனிருத் கரம் பிடித்தார். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ஆனால், இதில் தனுஷ் கலந்து கொள்ளவில்லை..

இந்நிலையில்தான் தனுஷுக்கு அனிருத் அழைப்பிதழே கொடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. திருமணத்திற்கு மட்டுமல்லாமல் விரைவில் சென்னையில் நடக்கவுள்ள வரவேற்பு நிகழ்ச்சிக்கும் தனுசை அனிருத் அழைக்கவில்லை. என்னதான் கருத்து வேறுபாடு, மன சங்கடமோ இருந்தாலும் அனிருத்தை வளர்த்து விட்டவர் என்கிற முறையில் தனுசுக்கு பத்திரிக்கை வைத்திருக்க வேண்டும்’ என்கிறார்கள் திரையுலகினர்.

Murugan ..
Murugan ..

5155 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web