Anirudh Wedding: தீவில் கல்யாணம்!. 3 நாள் பங்ஷன்.. களை கட்டப்போகும் அனிருத் திருமணம்!...

 
anirudh

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தனுஷ் நடித்த 3 படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார். தனுசும் அனிருத்தும் இணைந்து உருவாக்கிய பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. ஒரு கட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மானையெல்லாம் ஓவர்டேக் செய்து ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்கள் கொடுத்தார் .

அனிருத்துக்கு 35 வயதாகிவிட்டாலும் இப்போது வரை அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. சன் டிவி மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும், அனிருத்துக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இரு தரப்பும் இதைப்பற்றி எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. அதேநேரம், இந்த செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை. ஆனாலும் சில நாட்களுக்கு முன்பு ஒய்.ஜி மகேந்திரன் அளித்த பேட்டியில் இதை மறைமுகமாக உறுதி செய்தார்.

இந்நிலையில்தான் வருகிற நவம்பர் 12ம் தேதி அனிருத் திருமணம் மெக்சிகோவில் உள்ள சிசல்ஸ் தீவில் உள்ள ரிசார்ட்டில் நடைபெறவுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியிருக்கிறது. அனேகமாக மூன்று முதல் நான்கு நாட்களுக்கு அனிருத்தின் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் எனவும் அதன்பின் சென்னையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகினரும் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

From Around the web