திருமணம், தேனிலவு எல்லாம் ஓவர்!.. சென்னைக்குத் திரும்பிய அனிருத் - காவ்யா மாறன்!..
அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் நவம்பர் 11ஆம் தேதி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். தற்போது திருமணத்தை முடித்துக்கொண்டு அனிருத் மற்றும் காவ்யா சென்னைக்குத் திரும்பியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
திருமணப் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, சென்னையில் வரும் நவம்பர் 21ஆம் தேதி அனிருத் காவ்யாவிற்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அரசியல், சினிமா, கிரிக்கெட் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
The Newlyweds are back in Chennai! 😍❤️ #AnirudhRavichander and #KavyaMaran arrive at Chennai Airport after their dreamy Greece wedding! 💍 https://t.co/r6resPvkma
— Thara❤️ (@Thaaraaura) November 14, 2026
அனிருத் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு புதிய படங்களில் கமிட்டாகமல் ஜனவரி வரை ரெஸ்ட் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும், கமல்ஹாசனின் சண்டியர் அனிருத்தின் அடுத்த முக்கியமான திரைப்படமாகும். அரசன் படத்திற்கும் அனிருத் இசை வேலைகளை பார்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பிஸியாக இருந்த அனிருத் தனது திருமண வாழ்க்கையைத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள வரவேற்பு நிகழ்ச்சியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
