×

மாஸ்டர் சிங்கிளில் ’சம்பவம்’ செய்ய காத்திருக்கும் அனிருத்

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து படக்குழுவினர் இந்த படத்தை புரமோஷன் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்

ஏற்கனவே ’மாஸ்டர்’ படத்தின் மூன்று லுக் போஸ்டர்கள் வெளியாகி ஃபேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

’மாஸ்டர்’ படத்தின் சிங்கிள் பாடல் ’சம்பவம்’ என்று தொடங்கும் என்றும், இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்து அவரே பாடி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த பாடல் ரிலீஸ் குறித்த தகவல்கள் இன்னும் ஓரிரு நாளில் வெளிவர இருப்பதாகவும் அனைவருக்கும் தரமான சம்பவம் இருப்பதாகவும் குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு சரியான இசை விருந்தாக இந்த பாடல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது

விஜய், மாளவிகா மோகனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான், தீனா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News