11ம் மாசம்.. 11ம் தேதி.. 11 மணி.. அனிருத்தின் திருமணத்தில் செண்டிமெண்ட்...
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். கமல், ரஜினி, அஜித் போன்ற முன்னணி நடிகரின் படங்களுக்கு இசையமைத்து வருபவர்.
இந்நிலையில்தான் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை நவம்பர் 11ம் தேதியான நேற்று கிரீஸ் நாட்டில் அவர் திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமண விழாவில் முக ஸ்டாலின், ரஜினிகாந்த் போன்ற முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும் திருமண புகைப்படங்களை அனிருத் தனது சமூகவலைத்தள பக்கங்களிலும் வெளியிட்டிருந்தார். இதையடுத்து திரையுலகை சேர்ந்தவர்களும் ரசிகர்களும் அனிருத் - காவ்யா ஜோடிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அனிருத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 21ம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதிலும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்..
இந்நிலையில்தான், அனிருத்தின் திருமணம் நவம்பார் மாதம் அதாவது 11வது மாதம், 11ம் தேதி.. காலை 11 மணிக்கு நடந்துள்ளது. இதற்குப் பின்னணியில் ஏதேனும் செண்டிமெண்ட் இருக்கிறதா இல்லை ஜோசியப்படி அப்படி திருமணம் நடந்ததா என்பது தெரியவில்லை..
