ஜனவரி மாசம் வரைக்கும் மியூசிக் பண்ணமாட்டேன்!.. இயக்குனர்களுக்கு ஷாக் கொடுத்த அனிருத்...

 
anirudh

ஆரம்ப காலத்தில் தனுஷின் திரைப்படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அனிருத். அதன்பின் மற்ற நடிகர்களுக்கும் இசையமைக்க தொடங்கினார். சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என வளர்ந்த அனிருத் ஒரு கட்டத்தில் விஜய், அஜித் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார்.

கடந்த பல வருடங்களாகவே ரஜினியின் பல படங்களுக்கும் அனிருத்தான் இசை. இந்நிலையில்தான், அனிருத்தின் திருமணம் சில நாட்களுக்கு முன்பு கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

திருமண வேலை காரணமாக கடந்த அக்டோபர் மாதம் முதலே அனிருத் எந்த புதிய எந்த திரைப்படத்தின் வேலையிலும் ஈடுபடவில்லை என்கிறார்கள். அதோடு, 2027 ஜனவரி வரை நான் எந்த படத்திற்கும் இசையமைக்க மாட்டேன் என இயக்குனர்களிடம் கூறிவிட்டாராம். இதனால் பலரும் அப்செட் ஆகியிருக்கிறார்கள். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்திலிருந்து அனிருத்தை தூக்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

Murugan ..
Murugan ..

5151 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web