மாட்டிக்கினாரு ஒருத்தரு! அமெரிக்காவில் காவ்யாமாறனுடன் வலம் வரும் அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர் இசையமைத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் வெளி நாடுகளிலும் கச்சேரிகளை நடத்தி உலகளவிலும் புகழ் பெற்று வருகிறார். கோலிவுட்டில் மூணு படத்தின் மூலம் அறிமுகமான அனிருத்தை இந்த சினிமாவிற்கு கொண்டு வந்தவர் நடிகர் தனுஷ்.
தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளிலும் இவர் இசையமைத்து வருகிறார். குறிப்பாக விஜய் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் இவருடைய புகழ் கொடி கட்டி பறந்தது. துப்பாக்கி படத்தில் இவருடைய பிஜிஎம் உலகளவில் புகழ்பெற்றது. தற்போது இசைத்துறையில் இவர்தான் கோலோச்சி வருகிறார். விஜய், அஜித், ரஜினி இவர்களுக்கு எப்படி ரசிகர் பட்டாளம் இருக்கிறதோ அதே அளவுக்கு அனிருத்துக்கும் இருக்கிறார்கள்.
இவருடைய துள்ளலான இசை இன்றைய இளம் தலைமுறையினருக்கு மிகுந்த உற்சாகத்தை தருகிறது. இன்னொரு பக்கம் இவருடைய திருமணம் பற்றிய செய்தியும் அவ்வப்போது பேசு பொருளாகி வருகிறது. அனிருத் மேடையேறினாலே அவருடைய திருமணத்தை பற்றித்தான் பேசுகிறார்கள். ஒரு சமயம் ரஜினியே அனிருத்தை பல பெண்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனத்தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்தான் அனிருத் திருமணன் செய்ய இருக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியானது. ஆனால் அது வெறும் வதந்தி என கூறப்பட்டது. அதிலிருந்தே அனிருத்தையும் காவ்யா மாறனையும் இணைத்து பல பத்திரிக்கைகள் கிசுகிசுக்களை எழுதி வந்தனர்.

இந்த நிலையில் அமெரிக்காவில் காவ்யா மாறனுடன் அனிருத் ஒன்றாக வலம் வரும் காட்சி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது. இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு வேளை உண்மையிலேயே இருவரும் காதலிக்கிறார்களா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
