பஞ்சயாத்து ஓவர்!.. அனிருத்துடன் மீண்டும் இணையும் தனுஷ்?!..

 
dhanush anirudh


ரஜினியின் நெருங்கிய உறவினராக இருந்ததால் தனுசுக்கும் அனிருத் பழக்கமானார். இருவரும் சேர்ந்து ‘ஒய் திஸ் கொலவெறி’ பாடலை உருவாக்கி யுடியூப்பில் வெளியிட அது உலகமெங்கும் பிரபலமானது. அதன்பின் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த 3 திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

அதன்பின் தொடர்ந்து தனுஷ் நடித்த மற்றும் தயாரித்த திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைத்தார். ஒரு கட்டத்தில் கோலிவுட்டின் முக்கிய இசையமைப்பாளராக அனிருத் மாறினார். மேலும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தார்..

ஆனால் தனுசுக்கு பிடிக்காத சிவகார்த்திகேயன், விக்னேஷ் சிவன், நயன்தாரா போன்றவர்களுடன் நெருக்கமான அனிருத் அவர்களின் படங்களுக்கு இசையமைக்க தொடங்கினார். இது தனுசுக்கு பிடிக்கவில்லை. எனவே தனுசுக்கு, அனிருத்துக்கும் இடையே விரிசல் உருவானது..

கடந்த பல வருடங்களாகவே தனுஷின் திரைப்படங்களுக்கு அனிருத் இசையமைக்கவில்லை. சமீப காலமாகவே ரஜினி குடும்பத்தோடு தனுஷ் நெருக்கமாக காணப்படுகிறார்.. விரைவில் அவர் மீண்டும் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் இணைவார் எனவும் செய்திகள் அடிபடுகிறது. அதேபோல், அனிருத்தின் திருமணத்திற்கு ஐஸ்வர்யா உள்ளிட்ட ரஜினியின் குடும்பத்தாருடன் தனுஷும் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷின் ஒரு புதிய படத்திற்கு அனிருத் இசை அமைக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Tags

From Around the web