வாவ் செம ரொமான்ஸ்!.. மனைவியுடன் அனிருத்!.. அவரே வெளியிட்ட போட்டோஸ்!..
தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தொடக்கத்தில் தனுசுடன் இணைந்து இவர் இசையமைத்து வெளியான ‘ஒய் திஸ் கொலவெறி’ ஆல்பம் பாடல் உலகமெங்கும் ஹிட் அடித்து யூடியூபில் பல கோடி வியூஸ்களை பெற்றது.

அதன் பின் தனுஷ் நடித்த 3 திரைப்படம் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் தொடர்ந்து பல திரைப்படங்களுக்கும் இசையமைத்து ஒரு கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறினார். இதனால், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கையே குறைந்து போனது.

ஒருபக்கம்,கடந்த 11ம் தேதி சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை அனிருத் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் திரையுலக சேர்ந்த பலரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறறது.

தனது திருமண தொடர்பான சில புகைப்படங்களை அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
