×

கணவரை ஓங்கி பளார் விட்ட நடிகை... கடுப்பான கணவர்... நடந்தது என்ன?

அனைத்து மனைவிமார்களுக்கும் பிடிக்கும் மேஜிக் என்று சொல்லி காதல் கணவரை கன்னத்தில் அறைந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தயவு செய்து இதை வீட்டில் முயற்சி செய்யவும் என தெரிவித்துள்ளார் நடிகை அனிதா ஹசநந்தனி.
 
images

அனைத்து மனைவிமார்களுக்கும் பிடிக்கும் மேஜிக் என்று சொல்லி காதல் கணவரை கன்னத்தில் அறைந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தயவு செய்து இதை வீட்டில் முயற்சி செய்யவும் என தெரிவித்துள்ளார் நடிகை அனிதா ஹசநந்தனி.

மனோஜ் பாரதிராஜாவின் வருஷமெல்லாம் வசந்தம் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தவர் அனிதா ஹசநந்தனி. விக்ரமின் சாமுராய், சுக்ரன், நாயகன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ரோஹித் ரெட்டி என்பவரை காதலித்து கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9ம் தேதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் அனிதா. அந்த குழந்தைக்கு ஆரவ் ரெட்டி என்று பெயர் வைத்துள்ளனர்.

ஆரவ் பெயரில் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி அனிதாவும், ரோஹித்தும் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். மேலும் கணவனும், மனைவியும் சேர்ந்து அவ்வப்போது காமெடி வீடியோக்களையும் வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில் அனைத்து மனைவிகளும் விரும்பும் ஒரு மேஜிக் என்று கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அனிதா. அந்த வீடியோவை வெளியிட்டு, தயவு செய்து இதை வீட்டில் செய்து பார்க்கவும் என கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News