ரஜினி படத்தில் அனிதா சம்பத் நடித்திருக்கிறாரா? வெளியான ஷாக்கிங் புகைப்படம்!
அனிதா சம்பத் ரஜினி படத்தில் நடித்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது அதன் விரிவான தகவல்!
Tue, 30 Mar 2021

செய்தி வாசிப்பாளனியாக மீடியா உலகில் நுழைந்த அனிதா சம்பத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இளம் ரசிகர்கள் பட்டாளம் செய்திகளை கேட்டதென்றால் அது அனிதாவுக்காக தான் என பலர் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.
சர்கார், காப்பான் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் அனிதா செய்தி வாசிப்பாளராக நடித்து புகழ்பெற்றார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்நிலையில் தற்போது ரஜினி நடிப்பில் வெளியான காலா படத்திலும் அனிதா செய்தி வாசிப்பாளினியாக நடித்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.