×

எங்க போன ராசா!... அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன் - அனிதா சம்பத் உருக்கம்

 

செய்தி வாசிப்பாளரும், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான அனிதாவின் தந்தை சம்பத் சமீபத்தில் மாரடைப்பில் மரணமடைந்தார்.  இது அனிதாவிற்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன் தனது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிதா குறிப்பிட்டிருப்பதாவது:  

அப்பாவ கடைசியா இப்படிதான் பாத்தேன்..பிக்பாஸ் quarantine போகும்போது எடுத்தது..

அப்பானா எனக்கு உயிரு..எங்க எங்கயோ டூர் கூட்டிட்டு போனும்னு ஆசையா ஓடி வந்தேன்..எனக்கு முன்னாடியே நீயே கிளம்பி போய் இருக்க கூடாது டாடி..

ஒரு நாள் பொருத்து இருந்தா நான் கூட வந்துருப்பேன்..உன்ன வழியிலயே hospital கூட்டிட்டு போய் இருப்பேன்..நீ இன்னும் பத்து வர்ஷமாவது என் கூட இருந்து இருப்ப..

Sorry daddy..என்னால உன்ன காப்பாத்த முடியல..வாழ்நாள் முழுவதும் இந்த குற்றஉணர்ச்சி என்ன விட்டு போகாது..

எங்க போன ராசா...

என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News