×

சீக்கிரம் சொல்லி தொலை... திருமணநாளன்று கணவரை திட்டிய அனிதா

இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் பப்பு! மேலும் 61-வது மாத காதல் ஆண்டுவிழா! சீக்கிரமா “ஐ லவ் யூ” சொல்லி தொலை. 

 
92e15c2e-30d1-40a1-bf60-aaf44c098f79

பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அனிதா, எப்போதும் கணவருடன் சேர்ந்து வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் தனது 2-ம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு, கணவர் பிரபாகரனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் அனிதா.

அதில், “சிறந்த கணவர்! என் குடும்பத்திற்கு சிறந்த மருமகன் (மற்றும் இரண்டாவது மகன்)! எனது நாத்தனார்கள் & மாமியாருக்கு சிறந்த சகோதரர் மற்றும் மகன். ஒவ்வொரு விதத்திலும் மிஸ்டர் பெர்ஃபெக்ட்!

ani

கடவுள் எனக்கு வாழ்க்கைல பண்ண பெரிய நல்ல விஷயம் உன்ன சந்திக்க வச்சது தான்! மீடியா பெண்ணின் வளர்ச்சியை திருமணம் நிறுத்தும் என்று கூறினார்கள்! ஆனால் நம் திருமணத்திற்கு பிறகு தான் நான் வளர்ந்தேன்! அதற்கு உனது நம்பிக்கை, நீ கொடுத்த சுதந்திரம் மற்றும் ஊக்கம் தான் காரணம்.

அனைத்து மேடு பள்ளங்களையும் தாண்டி நீ என்னிடம் காட்டும் நிபந்தனையற்ற அன்புக்கு நன்றி!

எனக்காக நீ செய்யும் எல்லாவற்றிற்கும் நன்றி! ஒன்றாக நம் கனவுகளைத் துரத்தலாம் பப்பு!

ani

என் வளர்ச்சியோட காரணமா இருந்துட்டு, ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கிற உனக்கு திருப்பி குடுக்க காதலை தவிர எதுவும் இல்ல! நம் காதல் போல் நாமும் வளர்வோம்!

இரண்டாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் பப்பு! மேலும் 61-வது மாத காதல் ஆண்டுவிழா! சீக்கிரமா “ஐ லவ் யூ” சொல்லி தொலை. 5 வருஷமா காத்திருக்கேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அனிதாவின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News