×

அடப்பாவிகளா… அஞ்சு வருசம் கழிச்சி அஞ்சான் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு!

அஞ்சான் படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷனை 14 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

 

அஞ்சான் படத்தின் இந்தி டப்பிங் வெர்ஷனை 14 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

தமிழில் எடுக்கப்படும் ஆக்‌ஷன் படங்களுக்கு இந்தியில் நல்ல மார்க்கெட் உண்டு. அதனால் படத்தின் பட்ஜெட்டே இந்தி டப்பிங் தொகையையும்  கணக்கில் கொண்டே போடப்படுகிறது. அப்படி வாங்கப்படும் தமிழ் படங்கள் டப்பிங் செய்யப்பட்டு தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாது. அவை தொலைக்காட்சிகள் மற்றும் யுட்யூப் போன்றவற்றில் மட்டுமே ரிலீஸாகும்.

அதனால் தமிழில் வெளியாகும் ஆக்‌ஷன் படங்கள் அங்கே பல கோடி பேரால் பார்க்கப்படும். அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளியாகி படுதோல்வி அடைந்த அஞ்சான் திரைப்படம் இந்தியில் யுடியூபில் மட்டும் 14 கோடி பேரால் பார்க்கபட்டு சாதனை படைத்துள்ளது.  இது குறித்து படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘‘எல்லோரும் சூர்யாவையும் லிங்குசாமியையும் கேலி செய்தார்கள். ஆனால் இந்திரசிகர்கள் 14 கோடி பேர் இந்த படத்தை பார்த்துள்ளனர். ஒவ்வொரு மொழி சந்தையும் ஒவ்வொரு மாதிரி. ஆனாலும் அஞ்சான் ஒரு நல்ல பாடம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News