ஐயோ!.. எவ்ளோ க்யூட்டா பர்த்டே கொண்டாடியிருக்காரு அஞ்சலி!.. வைரலாகும் போட்டோஸ்!..
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான அஞ்சலி, நேற்று தனது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய நிலையில், அந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 'கற்றது தமிழ்', 'அங்காடித் தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'கலகலப்பு' உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அஞ்சலி. கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடிகையாக அறியப்படும் அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் தொடர்ந்து பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் பல்வேறு மொழித் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வரும் அஞ்சலி, கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களிடையே தனித்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அஞ்சலி தற்போது நடிகர் விஷாலுடன் நடித்துக்கொண்டிருக்கும் மகுடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மேலும், வெகு நாளாக வெளியாகமல் இருக்கும் ஏழு கடல் ஏழு மலை படம் இந்த வருடமாவது வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்களுடன் அவர் வெளியிட்ட பதிவில், "என் பிறந்தநாளில் நீங்கள் காட்டிய அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனைவரும் என் நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றிவிட்டீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அஞ்சலியின் இந்த பதிவு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அஞ்சலியின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவரது புதிய திரைப்பட அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
