இந்த வருஷம் பிறந்தநாளுக்கும் அஞ்சலியின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் ஆகல!.. மகுடம் சீக்கிரம் வருது!..

 
anjali

தென்னிந்திய திரையுலகின் திறமையான நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் அஞ்சலி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் சமூக வலைதளங்கள் மூலம் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த அஞ்சலி, மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தை தொடங்கினார். தமிழ் சினிமாவில் இயக்குநர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற அவர், தொடர்ந்து அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், இறைவி, தரமணி உள்ளிட்ட பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலுவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் அஞ்சலி, கடந்த சில ஆண்டுகளில் மீண்டும் பிஸியான நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் வெளியான கேம் சேஞ்சர் மற்றும் மத கஜ ராஜா உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது.

தற்போது அஞ்சலி நடிப்பில் பல திரைப்படங்கள் தயாரிப்பில் உள்ளன. இயக்குநர் ராம் இயக்கிய ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனுடன் ஈகை, மகுடம், பூச்சாண்டி மற்றும் கரிகாலன் போன்ற படங்களிலும் அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அஞ்சலியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரது திரைப்பட காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் வாழ்த்து பதிவுகளை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரியுடன் அஞ்சலி நடித்த ஏழு கடல் ஏழு மலை படம் இந்த ஆண்டும் வெளியாகவில்லை. அந்த படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பல முறை அறிவித்தும் இன்னமும் அந்த படம் வெளியாகாதது அஞ்சலிக்கு மிகப்பெரிய பின்னடைவாகவே உள்ளது.

ஆனால், விஷால் உடன் மத கஜ ராஜா 12 ஆண்டுகள் கழித்து வெளியாகியும் வெற்றியடைந்த நிலையில், மீண்டும் அவருடன் நடித்துள்ள மகுடம் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Tags

From Around the web