Categories: Cinema News latest news

ரஜினிகாந்தை அசிங்கப்படுத்த அந்த வசனம் வச்சீங்களா?.. ‘அஞ்சாமை’ பட இயக்குனர் அந்தர் பல்டி!..

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் கடந்த ஆண்டு இறுகப் பற்று திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. கைதி உள்ளிட்ட படங்களை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. இறுகப்பற்று படத்தில் நடித்த விதார்த்தை வைத்து மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனம் தற்போது அஞ்சாமை என்னும் படத்தை தயாரித்துள்ளது.

வரும் ஜூன் 7-ஆம் தேதி அஞ்சாமை திரைப்படம் வெளியாகிறது. இந்தப்படத்தில் வித்தார்த், ரகுமான் மற்றும் வாணி போஜன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். துருவங்கள் 16, பொன்னியின் செல்வன் என நடிகர் ரகுமான் மீண்டும் நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இதையும் படிங்க:  இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாம்!.. அரண்மனை 4 ஓடிடி ரிலீஸ் இந்த வாரம் இல்லையாம்!..

முக்கியமான குற்றப் பின்னணியை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ள நிலையில், இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் காட்சியில் ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள் அந்த படத்தின் இயக்குனர் எஸ்.பி. சுப்புராமனை சூழ்ந்து கொண்டு கேள்விகளாக கேட்டு தொலைத்து எடுத்தனர்.

பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கேள்வி கேட்க அந்த இடமே போர்க்களமாக மாறியது. நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சை அப்படியே வேறு ஒருவர் பேசுவது போல காட்சியாக வைத்திருப்பது ஏன்? என்கிற கேள்வியை இயக்குனரிடம் பத்திரிக்கையாளர்கள் எழுப்ப, அப்படியா? எனக்கு தெரியாதே என மழுப்பலாக பதில் அளித்துள்ளார் இயக்குனர்.

இதையும் படிங்க: இது கமலோட ஃபேவரைட் நடிகையாச்சே! ‘கூலி’ படத்தில் நாயகியாகும் பிரபலமான பேருள்ள நடிகை

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை கலாய்க்க நினைக்கவில்லை என்றும் எங்கேயோ கேட்ட சில விஷயங்கள், மூளையில் பதிந்த நிலையில் அந்த காட்சிக்கு தேவைப்பட்ட போது அது வெளிப்பட்டது என்றும் ரஜினிகாந்த் இதைப் பேசினாரா என்பதை தனக்கு தெரியாது என பதில் அளித்துள்ளார்.

Saranya M
Published by
Saranya M