×

அஞ்சான் பட நடிகர் கொரோனாவால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

 
அஞ்சான் பட நடிகர் கொரோனாவால் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 4.01 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், பொதுமக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மந்திரிகள், முதல்வர்கள், நடிகர்/நடிகைகள் என யாரும் தப்பவில்லை.

இந்நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலரும் நடித்த அஞ்சான் திரைப்படத்தில் சமந்தாவுக்கு அப்பாவாக நடித்த நடிகர் ‘பிக்ரம்ஜித் கன்வர்பால்’ சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 52. 

ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற பிக்ரம்ஜித் 2003ம் ஆண்டு பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். இவரின் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News