Categories: Cinema News latest news

எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் வசூலில் பட்டையை கிளப்பும் அண்ணாத்த

சூப்பர் ஸ்டார் ரஜினி என்ற ஒன் மேன் ஆர்மி தான் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அன்று முதல் இன்று வரை இவருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை துளியும் குறையவில்லை. வயதானாலும் சிங்கத்தின் சீற்றம் குறலயாது என்பது போல இந்த வயதிலும் ரஜினியின் மாஸ் குறையவே இல்லை.

இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான படம் தான் அண்ணாத்த. தீபாவளியை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான அண்ணாத்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களையை பெற்று வருகிறது.

Annaatthe

பாசமலர், உடன்பிறப்பே, கிழக்கு சீமையிலே போன்ற படங்கள் பாணியில் அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து அண்ணாத்த படத்தை இயக்குனர் சிவா இயக்கி உள்ளார். ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி என பலர் நடித்துள்ள அண்ணாத்த படத்திற்கு ரஜினி ரசிகர்களை தவிர மற்ற ரசிகர்கள் எதிர்மறை விமர்சனங்களையே அளித்து வருகிறார்கள்.

இருப்பினும் அண்ணாத்த படம் வெளிநாடுகளில் மட்டும் முதல் நாள் முதல் ஷோவில் மட்டுமே சுமார் 11 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முதல் நாள் வசூலே இத்தனை கோடிகளை தொட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அண்ணாத்த படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் மட்டும் சுமார் 1100 திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அண்ணாத்த படத்தின் வசூலை பார்க்கும்போது வெளிநாடுகளில் ரஜினிக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிந்துள்ளது.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்