Categories: Cinema News latest news Trailer

இது தான்டா ரஜினி ஸ்டைல்…. அவனுக்கு கரையும் கிடையாது தடையும் கிடையாது – அண்ணாத்த டீசர்!

ரஜினிகாந்த் நடிப்பில் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Annaatthe Official Teaser

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Annaatthe Official Teaser

அண்மையில் ” அண்ணாத்த அண்ணாத்த ” என்றும் இன்ட்ரோ பாடல் மற்றும் சார காற்றே எனும் ரொமான்டிக் பாடல் என இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை குதூகலப்படுத்தியது. இந்நிலையில் இன்று படத்தின் டீசர் ஆயுத பூஜா தினத்தை முன்னிட்டு படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

 

Annaatthe Official Teaser

இந்த படத்தில் காட்டாறு எனும் கதாபாத்திரத்தில் ரஜினி கிராமத்து ஆளாக நடித்து பட்டைய கிளப்பியுள்ளார். எனவே இப்படம் அஜித் விஸ்வாசம் சாயலில் மீண்டும் மகத்தான வெற்றி பெற்று இயக்குனர் சிவாவிற்கு மிகப்பெரும் பாராட்டுக்கள், சாதனைகள் குவியும் என எதிர்பார்க்கலாம். இதோ அந்த டீசர் வீடியோ!

Annaatthe Official Teaser

பிரஜன்
Published by
பிரஜன்