Categories: Cinema News latest news

எத்தனை தியேட்டர்களில் அண்ணாத்த?.. முதல்காட்சி எத்தனை மணிக்கு தெரியுமா?…

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தின் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும்,குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தில் ரஜினி கிராமத்து ஆளாக நடித்து பட்டைய கிளப்பியுள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் போல் இப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படம் நாளை காலை வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 650 தியேட்டர்களில் அண்ணாத்த படம் வெளியாகிறது. இதற்கான முன்பதிவு கடந்த வாரமே துவங்கிவிட்டது. பல தியேட்டர்களில் முதல் 2 நாட்களுக்கான முன் பதிவுகள் முடிந்து

சென்னை, புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது.

ரஜினி நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டரில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறை நாளில் படம் வெளியாவதால் சிறப்பு காட்சிக்கு அனுமதியெல்லாம் பெற தேவையில்லை.

அதேபோல், வெளிநாடுகளிலும் இப்படம் 1193 தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 677 தியேட்டர்கள், ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 86, ஆஸ்திரேலியா – 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 தியேட்டர்கள் என மொத்தம் 1193 தியேட்டர்களில் அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா