Categories: Cinema News latest news

அண்ணாத்த பாட்டு சிம்பு அளவுக்கு கூட இல்லையே!.. ஷாக் ஆகி அப்செட் ஆன ரஜினி….

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக இருப்பவர் ரஜினி. ரூ.100 கோடி வரை சம்பளம் பெறுகிறார். 70 வயதை நெருங்கினாலும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெறவில்லை.

அஜித் நடித்த விஸ்வாசத்தோடு போட்டி போட்டு பல்பு வாங்கியது ‘பேட்ட’திரைப்படம். வசூலில் விஸ்வாசம் சக்கை போடு போட ‘பேட்ட’ படத்தின் வசூல் குறைந்தது. அதன்பின் வெளியான ‘தர்பார்’ படமும் தயாரிப்பாளருக்கு தோல்வியை கொடுத்தது. எனவேதான், விஸ்வாசம் பட இயக்குனர் சிவாவோடு கூட்டணி அமைத்தார் ரஜினி.

மேலும், தீபாவளிக்கு அண்ணாத்த வருவதால் ‘வலிமை’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டாம் என இயக்குனர் சிவாவே அஜித்திடம் கோரிக்கை வைக்கும் அளவுக்கு சென்றது. எனவே, வலிமை பொங்கலுக்கு தள்ளிப்போனது.

அரசியலுக்கு வருவேன் என 25 வருடங்களுக்கு மேல் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த ரஜினி கடந்த வருடம் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். கடந்த 4ம் தேதி இப்படத்தின் முதல் பாடல், அதாவது ரஜினி அறிமுகமாகும் டைட்டில் பாடல் வெளியானது.

இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இணையும் ஜோடி.. இப்போ ஆளே மாறிட்டாங்க!

வழக்கம் போல் ரஜினியின் புகழ் பாடும் பாடலாக அது அமைந்திருந்தது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அப்பாடலை பாடியிருந்தார். இமான் இசை அமைத்திருந்தார். ஆனால், இப்பாடல் ‘படையப்பா’ படத்தின் சிங்கநடை போட்டு பாடல் போலவே இருப்பதாக சமூகவலைத்தளங்களில் பலரும் பதிவிட்டனர்.

மேலும், மாநாடு படத்தின் பாடல் வெளியாகி 2 நாட்களில் 10 மில்லியன் (ஒரு கோடி) பேர் பார்த்த நிலையில், அண்ணாத்த பாடல் வெளியாகி 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வெறும் 5 மில்லியன் பேர் மட்டுமே பார்த்துள்ளனர்.

அதோடு, வழக்கமாக ரஜினி படங்களில் இடம் பெற்ற முதல் பாடல் ஏற்படுத்தும் எந்த தாக்கத்தையும் இப்பாடல் ஏற்படுத்தவில்லை என பலரும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: தனுஷை விட அதிக சம்பளம் கொடுங்க… அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன் – எத்தனை கோடி தெரியுமா?

அரசியலுக்கு வருவதாக கூறி பின் வாங்கியது மற்றும் வேறு சில காரணங்களால் இப்பாடல் வரவேற்பை பெறவில்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாத்த பாடல் பெரும் வரவேற்பை பெறாமல் போனதால் ரஜினியே அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா