×

தீபாவளிக்கு சூப்பர் ஸ்டார் அண்ணாத்த கன்பார்ம்... போட்றா வெடிய!

அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதியுடன் அனைத்து வித படப்பிடிப்பும் முடிகிறது.
 
79277cb5-17c5-440c-ac4e-39d798a675bc

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை பகுதிகளில் நடந்து முடிந்தது.

rajni

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புடன், டப்பிங் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருவதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இதுவரை வெளியிடப்படாமலே இருந்தது. ரசிகர்களும் இந்த படத்தின் போஸ்டருக்காக காத்திருந்தனர். இதனால் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகாது என வதந்திகள் கிளம்பின.

rajni

தற்போது இந்த வதந்திகளை பொய்யாக்கும் விதமாக நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல் படி, அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதியுடன் அனைத்து வித படப்பிடிப்பும் முடிகிறது. மேலும் திட்டமிட்டபடி படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News